• Scientific Awareness

  • Social Responsibility

  • Self development

  • Learning and Development

Copyright 2019 - Custom text here

Young Scientists Program 2019-20 selection list will be published on 20th October 2019 at 12 Noon.

 

 

Home

22nd Book review programme by KAP Young Scientist 

2nd July 2017 at Vpro Technologies, Marthandam

மார்த்தாண்டத்தில் நூல்ஆய்வரங்கம்


குமரி அறிவியல்பேரவை இளம் விஞ்ஞானிகளின் 22வது நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனத்தில் குமரி அறிவியல்பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமையில் நடைபெற்றது .சிதறால் என்.எம்.வித்யாகேந்திரா சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மஞ்சு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் தேசியப்பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அரிமா ஜே.ஜோபிரகாஷ் குமரிமாவட்டத்தின் வனஅலுவலராக இருந்து ஓய்வுபெற்ற சுந்தரராஜீ எழுதிய 'ஜங்கிள் குரோணிக்கிள்' என்னும் ஆங்கிலநூலை அறிமுகம் செய்ய இளம் விஞ்ஞானி வர்ஷா திறனாய்வுசெய்தார். கல்வியாளர்கோபாலன் கவிஞர் கீழ்குளம் வில்லவன் கவிஞர் சி.சி.தங்கஅரசு பேராசிரியர்சஜிவ் விபுரோ டெக்னாலஜிஸ் இயக்குனர் வினோத், நிர்வாக அலுவலர் எஸ்.ஜாண்சன் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் இன்னும் 'தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன்,' என்னும் நூலை மேரிபிளசி யும் 'தாளாண்மைப்பண்ணையம்' இயற்கைவழி வேளாண்மை உத்திகள் என்னும் நூலை தேவஸ்டெபியும் ,'சந்தியான் ஒன்று 'என்ற நூலை பிரின்சியும் 'ஆல்பர்ட் ஐன்ஸ்டின்' என்னும்நூலை செல்வபாரதியும் 'முடிவல்ல ஆரம்பம்'என்னும் நூலை அஷ்வின் 'உயிரிப்பன்மயம் 'ஆர்த்தியும் 'யூ கேன் வின்' என்னும் ஆங்கில நூலை அஸ்மிதா ஆகியோர் ஆய்வுசெய்தனர் லெச்சுமி கிருஷ்ணவேணி ஆதித்தியா நித்தியவர்ஷ்ணி ரேஷ்மி அருண்குமார் ஆகியோர் பின்னூட்டம் வழங்கினர் இளம்விஞ்ஞானி மாளவிகா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

f t g m