• Scientific Awareness

  • Social Responsibility

  • Self development

  • Learning and Development

Copyright 2020 - Custom text here

Young Scientists Program 2019-20 selection list will be published on 20th October 2019 at 12 Noon.

 

 

Report of Introductory meet held at Government Boys Higher Secondary School, Marthandan on 26th October 2019 prepared by R.H.Hancy Rajesh, Leader Maroon Team. click here

Home

Kumari Arivial Peravai [In English:Kumari Science Forum] is a voluntary group doing service in the field of science and Technology in Kanyakumari District. To give scientific awareness to the village students and also to bring out the hidden talents in the young ones, we are conducting Science Exhibitions, Seminars, Quiz, Scientists Students Interaction, Science competitions etc in Kanyakumari District.

 

Kumari Arivial Peravai 2019
 

Young Scientist Program Selection List 2019-20

Young Scientist Program 2019-20 Selection list was released by Shri.L.Muthu, Deputy Director (Rtd) LPSC Valiamalai

and received by Mullanchery M Velaian, Organizer Kumari Arivial Peravai on 20th October 2019 at Young Scientist Selection result announcement meet held at Mullanchery.

 

Asiriar Thilakam Award 2019

To view invitation click here

குமரி அறிவியல் பேரவை சார்பில் வருடம் தோறும் குமரி மாவட்டத்தில் சிறப்பாகச்செயல்படும் எட்டு ஆசிரியர்களுக்கு வெள்ளிவிளாகம் அமரர் காளிக்குட்டிநாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஆசிரியர் திலகம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன் விருது வழங்கும் விழா நாகர்கோவில் ரோட்டரி சங்கக் கட்டிடத்தில் வைத்து 31-8-2019 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார் இளம் விஞ்ஞானி பர்மிதா ஆசிரியர் தினஉரையாற்றினார் மகேந்திரகிரி .எஸ்.ஆர்.. இணை இயக்குனர் கே.அழகுவேலு தொடங்கிவைத்தார். பேராசிரியர் சஜிவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மூடோடு சிக்மா ஆர்கிடெக்சர் கல்லூரியின் தலைவர் முனைவர் ஜேம்ஸ்வில்சன் வாழ்த்துரை வழங்கினார் .விருது பெற்ற எட்டு ஆசிரியர்களையும் பணிநிறைவு தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் , முன்னாள் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் திருவேங்கடம் பேராசிரியர் சஜிவ் ,பொறியாளர் வி.வி.வினோத், பணிநிறைவு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் டி.சாம்ராஜ், பணிநிறைவு தலைமையாசிரியர் எஸ்.ஜாண்சன், குழித்துறை ரோட்டரி தலைவர் சுனில்குமார் ,சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் ஆகியோர் அறிமுகம் செய்தனர் பணிநிறைவு .எஸ.ஆர்..ஜாண்ரபிகுமார் .எஸ்.ஆர்..விஞ்ஞானி புதியவன், சுற்றுச்சூழல் சுடரொளி ஜே.ஜோபிரகாஷ் ,இயற்கைவேளாண்மை ஆர்வலர் பிஜுராம் ,ஆசிரியை ஆர்.ஆர்.ரேகா , முனைவர் ஷிபின்ற்றாட், முனைவர் தன்யா ,கவிகீதா ,விமலா, கனகம் ஆகியோர் கௌரவித்தார்கள்
குழித்துறை கல்விமாவட்ட தொடக்கக்கல்விக்கான விருது பறம்பு அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை பி.ஜெயந்தி பள்ளிக்கல்விக்கான விருது கடையல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரெ.கிருஷ்ணதாஸ் பெற்றனர்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான தொடக்கக்கல்விக்கான விருது உடையடி அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செ.சங்கரகுமார் பள்ளிக்கல்விக்கான விருது இரவிபுதூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வி.எஸ்.ராஜன் பெற்றனர்,
தக்கலை கல்வி மாவட்டத்திற்கான தொடக்கக்கல்விக்கான விருது ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை எஸ்.விமலாமேரி, பள்ளிக்கல்விக்கான விருது மூலச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.மரியதங்கராஜ் பெற்றனர். குமரிமாவட்ட மெட்ரிக்பள்ளிகளுக்கான விருது குலசேகரம் எஸ்.ஆர்.கே.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சி.லலிதாபாய் பெற்றார்.மாற்று திறனாளிகள் குழந்தைகள் பள்ளிக்கான விருது கன்யாகுமரி அவிலா சிறப்புப்பள்ளியின் தலைமையாசிரியை அருள்சகோதரி லைலெட்பாய் பெற்றார் .மாற்று திறனாளிகள் பள்ளியின் மாணவ மாணவியர்களின் நடனம் நடைபெற்றது.

Books Reading & Review Skill Development Program for young scientist program 2019-20 was held on 24th August 2019 at Govt.H.S.School, Thuckalay. To view invitation click here

குமரி அறிவியல் பேரவை சார்பில் மனித கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இளம்விஞ்ஞானிகள் தேர்வு நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக புத்தகம் வாசித்தல் மற்றும் ஆய்வுதிறன் பற்றிய தேர்வு தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 24-8-2019 காலை 9.00 மணி முதல் நடைபெற்றது தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை இந்திரா தலைமை வகித்தார்.தொழிற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமணி வாழ்த்துரை வழங்கினார் இளம்விஞ்ஞானி ஷாலுகா தொகுத்து வழங்கினார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார் ராஜா கல்விகுழுமத்தின் இயக்குனர் முனைவர் அழகேஷன் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். விண்வெளி தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகள் அணியில் சமூக விஞ்ஞானி எட்வின்சாம் தலைமையில் ஆசிரியை சந்தியா சிவதேவி பர்மிதா ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் வேளாண்தொழில் நுட்பக் கண்டு பிடிப்புகள் அணியில் ஜாண்ரபிகுமார் நித்திகா ஷாலுகா சானியூல் ஹாம்பெல் ஜோ ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் சூழியல் தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகள் அணியில் பாலகிருஷ்ணன் ஆசிரியை ஷைனிஸ்ரீதேவ் காவியா அனூப் மோனிஜாய்ஸ் நெறிப்படுத்தினார்கள் மருத்துவ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியில் முனைவர் தன்யா ஜெயராகுல் அரிமா ஜே.ஜோபிரகாஷ் முனைவர் ஷிபின்ற்றாட் புவனேஷ்வரி ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் தகவல்தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியில் பேராசிரியர் சஜிவ் ஆசிரியை தீபா ஜெர்ஷா ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் மனிதகண்டுபிடிப்புகள் அணியில் சுனில்குமார் வி.வி.விக்ரம் ஆசிகா ஆகியோர் நெறிப்படுத்தினார்கள்.அடுத்து செப்டம்பர் 7ஆம்தேதி திட்டஅறிக்கை சமர்ப்பித்தல் நாகரகோவில் பெண்கிறித்தவக்கல்லூரியில் வைத்து நடைபெற இருக்கிறது என குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் தெரிவித்தார்.

KAP Independence day celebration 2019

குமரி அறிவியல் பேரவை மனித கண்டுபிடிப்புகள் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கான வரைபட செயல்விளக்கம் 15-8-2019 குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தியது . நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சுதாதேவி தலைமை வகித்தார் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார் இளம் விஞ்ஞானி காவியாஅனூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர்கள் மகேஷ்பாபு , ஜோதிஷ்மதிஅம்மா ஆகியோர் வாழ்த்துரைவழங்கினார்கள் மகேந்திரகிரி .எஸ்.ஆர்..விஞ்ஞானி பெருமாள் முனனிலை வகித்தார் விக்ரம் சாராபாய் விஞ்ஞானி எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றிவிட்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள் பின்னர் நடைபெற்ற வரைபட செயல்விளக்கம் குறித்தான மதிப்பீட்டு அமர்வுகள் நடைபெற்றது.விண்வெளி தொழில் நுட்பகண்டுபிடிப்புகள் அணியில் சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் ஆசிரியை சந்தியா மதிப்பீடு செய்தார்கள் பர்மிதா பிரியங்கா சர்மா அஸ்வின்கிருஷ்ணா அணிஉதவியாளராக செயல்பட்டனர் வேளாண்தொழில் நுட்பகண்டுபிடிப்புகள் அணியில் மகேந்திரகிரி .எஸ்.ஆர்..விஞ்ஞானி பெருமாள் தீபா ஆகியோர் மதிப்பீடு செய்தனர் சானியூல் ஷாலுகா ஹாம்புல்ஜோ ஆகியோர் அணிஉதவியாளர்களாய் செயல்பட்டனர். சுற்றுச்சூழல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் பாலகிருஷ்ணன் ஷைனி ஆகியோர் மதிப்பீடுசெய்தனர் ஸ்ரீதேவ் காவியா அனூப் ரெஜின் சஞ்சை ஆகியோர் அணிஉதவியாளர்களாக செயல்பட்டனர் .மருத்துவ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முனைவர் தன்யா கோபாலன் ஜெபர்சன் ஆகியோர் மதிப்பீடுசெய்தனர் .தகவல்தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியில் பேராசிரியர் சஜிவ் ஆசிரியை தீபா ஜெர்ஷா ஆகியோர் மதிப்பீடு செய்தனர் மனிதகண்டுபிடிப்புகள் அணியில் ஜாண்சன் சுனில்குமார் வினோத் ஆகியோர் மதிப்பீடுசெய்தனர் ஆதித்தியன் தனுஷ் ஆஷிகா ஆகியோர் அணி உதவியாளர்களாக செயல்பட்டனர்.

Presentation about Medicinal plants on Nature protection camp for young scientist program 2019-2020 at Nesamony Memorial Christian College,Marthandam on 20-7-2019

இயற்கை பாதுகாப்பு முகாமில் 230 மூலிகை செடிகள் நட்டனர் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக்கல்லூரியில்.
20-7-2019
அன்று குமரி அறிவியல் பேரவை 2019-2020 இளம்விஞ்ஞானிகள் தேர்வுக்காக மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியுடன் இணைந்து நடத்திய இயற்கை பாதுகாப்பு முகாமில் 230 மூலிகைள் பள்ளி மாணவர்கள் நட்டனர் இது இளம் விஞ்ஞானிகள் தேர்வில் இரண்டாவது கட்ட தேர்வு ஆகும்.தொடக்கவிழா நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார்.கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ராஜதுரை தொடங்கிவைத்தார் குழித்துறை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுனில்குமார் வேளாண் விஞ்ஞானி முனைவர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இளம்விஞ்ஞானி பிரியங்கா சர்மா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பின்னர் பின்னர் தாவர இயல் துறை வளாகத்தில் மூலிகைகள் நடும்நிகழ்ச்சி சுற்றுச்சூழல் விஞ்ஞானி முனைவர் சோபனராஜ் சுற்றுச்சூழல்சுடரொளி ஜோபிரகாஷ் முன்னிலையில் மாணவர்கள் மூலிகைகள் நட்டனர் .அணிவாரியாக நடந்த மதிப்பீட்டு அமர்வில் விணண்வெளி தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகள் அணிக்கு சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் தலையமயில் ஆசிரியை சந்தியா சிவதேவி அஸ்வின் கிருஷ்ணா ஆகியோர் மதிப்பீடு செய்தனர் முனைவர் சோபனராஜ் கருத்துரை வழங்கினார்.
வேளாண்தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகள் அணியில் எம்.ஜாண்ரபிகுமார் தலைமைவகித்தார்ஷாலுகா ஷானியூல் மதிப்பீடுசெய்தனர் வேளாண்விஞ்ஞானி முனைவர்சாம்ராஜ் கருத்துரைவழங்கினார்.
அடுத்து சுற்றுச்சூழல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியில் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார் ஸ்ரீதேவ் ரெஜின் சஞ்சய் காவியா அனூப் மோனிஜாய்ஸ் மதிப்பீடு செய்தனர் சுற்றுச்சூழல் சுடரொளி ஜோபிரகாஷ் கருத்துரை வழங்கினார். மருத்துவதொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியில் முனைவர் தன்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புவனேஷ்வரி ஜெபர்ஷன் மதிப்பீடு செய்தனர் முனைவர் சோபனராஜ் கருத்துரை வழங்கினார் தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அணியின் தலைவராக பேராசிரியர் சஜிவ் தலைமையில் ஆசிரியை தீபா விசால் அக்சரா ஜெர்ஷா லெச்சுமி ஆகியோர் மதிப்பீடு செய்தனர் மனிதகண்டுபிடிப்புகள் அணியில் தலைமையாசிரியர் ஜாண்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தனுஷ் ஆதித்தியன்ஆஷிகாசுனில் குமார் ஆகியோர் மதிப்பீடு செய்தனர்முன்னாள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சாம்ராஜ் கருத்தரை வழங்கினார் அடுத்த நிகழ்வு மாமட்டுக்கடை ஆர்.பி..சென்ரல் பள்ளியில் 27-7-2019 காலை 8.30 மணிமுதல் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 

Kumar Arivial Peravai Young scientist program 2019-2020 Introductory seminar on Human Innovation on 13-7-2019 at Marthandam college of Engineering,Kuttakuzhi

மனித கண்டுபிடிப்புகள் இளம்விஞ்ஞானிகள் தேர்வுக்கான அறிமுகக்கருத்தரங்கம் குட்டக்குழி மார்த்தாண்டம் பொறியியல்& தொழில்நுட்பக்கல்லூரியுடன் இணைந்து குமரி அறிவியல்பேரவை 13-7-2019 ல் நடத்தியது. நிகழ்ச்சியில் இளம்விஞ்ஞானி சிவசாந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் குமரி அறிவியல் பேரவையும் மாணவர்கள் மேம்பாடும் குறித்து காவியா அனூப் பேசினார் கல்லூரியின் தலைவர் முனைவர் ஜேம்ஸ்வில்சன் தலைமைவகித்தார் குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார் வலியமலா .எஸ்.ஆர்.. முன்னாள் இணைஇயக்குனர் முத்து கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதாகர் மாஷா இன்னொவேசன் சென்டர் நிறுவனர் மாஷாநசீம் எளிய கண்டுபிடிப்பு சிந்தனைகள் குறித்துப்பேசினார்கள் வேளாண் விஞ்ஞானி முனைவர் சாம்ராஜ் கலந்துகொண்ட பள்ளிகளுக்கு நூல்கள் பரிசளித்தார்.திருவனந்தபுரம் மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் துறைத்தலைவர் முனைவர் எஸ்.சாவித்திரி நிகழ்ச்சியைத்தொடங்கி வைததுப்பேசினார் முதல்அமர்வில் விண்வெளிதொழில் நுட்பக்கண்டுபிடிப்புகள் குறித்து .எஸ்.ஆர்..விஞ்ஞானி வேல்முருகன் பேசினார் சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் ஒருங்கிணைத்தார் ஆசிரியை சந்தியா நெறிப்படுத்தினார் பர்மிதா அறிமுகம் செய்தார் பிரியங்கா சர்மா பின்னூட்டம் வழங்கினார்
இரண்டாவது அமர்வில் வேளாண் தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் நித்திகா அறிமுகவுரையாற்றினார் ஜாண்ரபிகுமார் கருத்துரைவழங்கினார் சானியூல் பின்னூட்டம் வழங்கினார் தீபாதாஸ்நெறிப்படுத்தினார் மூன்றாவது அமர்வில் சுற்றுச்சூழல் தொழில் நுட்பங்கள் என்னும் தலைப்பில் நடந்த அமர்வில் பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார் காவியா அறிமுகம்செய்தார் மகேந்திரகிரி .எஸ்.ஆர். விஞ்ஞானி பூபா கோபாலன் கருத்துரை வழங்கினார் மோனி பின்னூட்டம் வழங்கினார் ஷைனி நெறிப்படுத்தினார் நான்காவது அமர்வில் மருத்துவதொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்ற அமர்வில் முனைவர் தன்னியா ஒருங்கிணைத்தார் தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சுஜின் ஹெர்பர்ட் கருத்துரைவழங்கினார் புவனேஷ்வரி அறிமுகம்செய்தார் வென்ஸ்லின் பின்னூட்டம் வழங்கினார் ஐந்தாவது அமர்வில் தகவல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் சஜிவ் நெறிப்படுத்தினார் லெச்சுமி அறிமுகவுரையாற்றினார் .எஸ்.ஆர். விஞ்ஞானி பென்சிகர்ராஜன் கருத்துரை வழங்கினார் தீபா நெறிப்படுத்தினார் ஜெர்ஷா பின்னூட்டம் வழங்கினார் பின்னர் நடைபெற்ற மொழித்திறன் தேர்வினை சுனில் குமார் ஜாண்சன் முனைவர் ஷிபின்ற்றாட் சாம்ராஜ் ஆதித்தியன் ஜெயராகுல் ஆஷிகா சிவதேவி ஸ்ரீதேவ் அஷ்வின்கிருஷ்ணா ஷாலுகா ரெஜின்சஞ்சய் விஷால் தனுஷ் ஆகியோர் நடத்தினார்கள் இரண்டாவது கட்ட தேர்வு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக்கல்லூரியல் மூலிகைச்செடி நடுதல் நிகழ்ச்சி 20-7-2019 நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Topics Selection meet

குமரி அறிவியல் பேரவை 2019-2020ஆண்டுக்கான இளம்விஞ்ஞானி தேர்வுக்காக விஞ்ஞானிகள் ,மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் 9-6-2019 அன்று நடைபெற்றது. குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வேளாண் விஞ்ஞானி முனைவர் சாம்ராஜ், மகேந்திரகிரி .எஸ்.ஆர். விஞ்ஞானி புதியவன் ,மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்சர் கல்லூரி தலைவர் முனைவர் ஜேம்ஸ்வில்சன் ,அகிலஇந்திய வானொலி நிலையத்திலிருந்து பணிநிறைவு நிகழ்ச்சித்தொகுப்பாளர் மங்காவிளை ராஜேந்திரன், தூத்துக்குடி துறைமுகக்கேப்டன் பென்னட்சிங் ,குமரி முத்தமிழ் மன்ற செயலாளர் பேராசிரியர் சஜிவ்,அடர்வனமும் நன்னீரும் அமைப்பின் நிறுவனர் துர்க்காதிரவியம் தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சுஜின்ஹெர்பர்ட், சமூகவிஞ்ஞானி எட்வின்சாம், மார்த்தாண்டம் எம்.வி.எம் கிட்ஸ் ஸ்கூல் தாளாளர் வினோத் ,மார்த்தாண்டம் விப்ரோ டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் எஸ்.ஜாண்சன் ,என்..கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் தன்யா ,வழிகாட்டி ஆசிரியைகள் தீபா ,சந்தியா , மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மலர்விழி, ஆய்வுமாணவி தீபா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சாம்ராஜ் ,பணிநிறைவு ஆசிரியை விமலா, குழித்துறை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சுனில்குமார் , முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருவேங்கடம், மகேந்திரகிரி .எஸ்.ஆர்.. பணிநிறைவு மருந்தாளுநர் எம்.ஜாண்ரபிகுமார் , ஆகியோர் கலந்து கொண்டு புதிய தலைப்புகள் குறித்து விவாதித்தனர் 'மனித கண்டுபிடிப்புகள்' என்னும் தலைப்ப்பு தேர்வானது அதனை வேளாண்கண்டுபிடிப்புகள், சூழியியல் கண்டுபிடிப்புகள், விண்வெளிக்கண்டுபிடிப்புகள், தகவல்தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள் என்னும் ஐந்து அத்தியாயங்களின் தலைப்புகளின்கீழ் ஒவ்வொன்றுக்கும் 12 துணைத் தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டது.குமரி மாவட்டப்பள்ளிகளில் எட்டாவது படிக்கும் மாணவ மாணவிகள் ஒரு பள்ளிக்கு ஐந்து பேர்வீதம் மற்றும் இரண்டு வழிகாட்டி ஆசிரியைகள் அனுப்பக்கேட்டு ஜீலை மாதம் 13 ஆம் தேதி குட்டக்குழி மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரியில் அறிமுகக் கருத்தரங்கம் நடத்துவது எனத்தீர்மானிக்கப்பட்டது

Workshop on Skill Development
குமரி அறிவியல் பேரவை சார்பில் மாணவர்கள் திறன் வளர்த்தல் பயிற்சிப்பட்டறை மாணவர்களுக்கு ஜீன் 22&23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுக வுரையாற்றினார் டி.எம் கான்வென்ட் அருள்சகோதரி மரியட்டா முன்னிலை வகித்தார் மூடோடு சிக்மா ஆர்கிடெக்சர் கல்லூரி தலைவர் முனைவர் ஜேம்ஸ்வில்சன் தொடங்கிவைத்தார் இளம் விஞ்ஞானி சானியூல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் படைப்புத்திறன் குறித்து கேப்டன் பென்னட்சிங் உரையாற்றினார் தலைமைத்திறன் குறித்து ஜாண்ரபிகுமார் பேசினார் உடல் மற்றும் நலவாழ்வு குறித்து டாக்டர் சுஜின் ஹெர்பர்ட் பேசினார் சமூகத்திறன் குறித்து எட்வின்சாம் பேசினார் தடைகள் தாண்டி வென்ற தலைவர்கள் குறித்து மாணவர்கள் தனித்தனி தலைப்புகளில் உரையாற்றினார்கள் தலைமைத்துவம் குறித்து நாடகம் நடத்திக்காட்டினார்கள்இரண்டாம் நாள் காலையில் யோகா பயிற்சியும் தியானமும் குறித்து முனைவர் சதீஸ்குமார் பயிற்சியளித்தார். குழுகட்டமைத்தல் மற்றும் ஒருங்கமைத்தல் குறித்து பாலகிருஷ்ணன் பேசினார் விமர்ச்சனசிந்தனை குறித்து முனைவர் தன்யா பயிற்சியளித்தார் தொடர்புத்திறன் குறித்து சுனில்குமார் பயிற்சியளித்தார் தீர்மானத்தின் சக்தி குறித்து ஜாண்சன் பயிற்சியளித்தார் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது மனிதக் கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவமானது விண்வெளித்தொழில் நுட்பம் ,தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வேளாண்தொழில் நுட்பம் .மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் தொழில் நுட்பம் என்ற தலைப்புகளில் நடைபெற்றது முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமையில் எட்வின்சாம் ஜாண்சன் முனைவர்தன்யா சுனில்குமார் பாலகிருஷ்ணன் பிரின்சி ஆகியோர் நடுவர்குழுக்களாக இருந்து விவாதித்தனர் . குழு ஆய்வுகள் பின்னூட்டம் மற்றும் நிறைவு விழாவுடன் பயிற்சிப்பட்டறை நிறைவுற்றது.

Skill development program on language translation and interpretation for KAP team supporters 2019-2020 on 5-5-2019 at Chitharal Malaikovil


மொழிமாற்றி பேசுதல் எழுதுதல் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் சிதறால் மலைக்கோவில் வளாகத்தில் 5-5-2019 அன்று நடைபெற்றது குமரி அறிவியல்பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமையில் நடைபெற்ற பயிற்சிமுகாமில் மொழிமாற்றுதலும் வகைகளும் என்னும் தலைப்பில் லெச்சுமி பயிற்சி அளித்தார் மேடைப்பேச்சும் மொழிமாற்றுதலும் திர்ஷியா பேசினார் நவீன உலகில் மொழிமாற்றுதலின் முக்கியத்துவம், கேட்கும்திறன, மொழிமாற்றும்,திறன் எழுதும் திறன் வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது குழுக்களாக பேசவைத்தும் எழுதவைத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. முனைவர் தன்யா சமூகவிஞ்ஞானி எட்வின்சாம், பேராசிரியர் சஜிவ், சுனில் குமார்,ஜாண்சன் ,தீபா ஆகியோர் நெறிப்படுத்தினார்கள்.வரும் கல்வி ஆண்டின் இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்காக அணிஉதவியாளராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்காக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

f t g m